உலகையே யோசிக்க வைத்த இராட்சத உயிரினம்: மர்மம் விலகியது (காணொளி)

இந்தோனேசியாவில் கடற்கரையொன்றில் அண்மையில் கரையொதுங்கிய இராட்சத உயிரினமொன்றின் சடலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது என்ன உயிரினம் என பலரும் யோசித்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இது என்ன உயிரினமாக இருக்குமென விஞ்ஞானிகள் தமது கருத்தை வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் கருத்துப்படி இது ஒருவகை திமிங்கிலமாம். ‘பலீன்’ என்ற வகையைச் சேர்ந்த திமிங்கிலத்தின் உடலே அது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
திமிங்கிலத்தின் உடல் அழுகும் போது அதில் உருவாகும் வாயு மற்றும் இரசாயன மாற்றம் காரணமாக அதன் தோற்றம் பெரிதளவில் மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த திமிங்கிலம் கப்பலில் மோதுண்டு உயிரிழந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment